/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செயற்கை முறையில் பழுத்த 90 கிலோ மாம்பழம் பறிமுதல்
/
செயற்கை முறையில் பழுத்த 90 கிலோ மாம்பழம் பறிமுதல்
ADDED : மே 03, 2024 06:45 AM
சென்னிமலை : சென்னிமலை பகுதியில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின்படி, சென்னிமலையில் செயல்படும் மாம்பழ குடோன், மொத்த விற்பனை கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட, 90 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். ஆய்வின்போது பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்திய இரு கடைகளுக்கு, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். உணவு பொருட்கள் விற்பனையில் குறைகள் இருந்தால், 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.