ADDED : ஏப் 24, 2026 05:06 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,379 ஓட்டுச்சாவடிகளில், நேற்று தேர்தல் நடந்தது. ஓட்டளிக்க, 17 லட்சத்து, 59,157 வாக்காளர்கள் தகுதி பெற்றவர்களாக இருந்தனர். காலை, 7:00 மணிக்கு தொடங்கி மாலை, 6:00 மணி வரை நடந்தது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஒவ்வொரு, 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தொகுதி வாரியான ஓட்டுப்பதிவு, சதவீதம் வெளியிடப்பட்டது.
இதன்படி காலை, 9:00 மணிக்கு, 3,44,193 ஓட்டு - 19.57 சதவீதம்; காலை, 11:00 மணிக்கு, 7,21,118 ஓட்டு - 40.99 சதவீதம்; மதியம், 1:00 மணிக்கு, 10,85,756 ஓட்டு - 61.72 சதவீதம்; மதியம், 3:00 மணிக்கு, 13,29,936 ஓட்டு - 75.60 சதவீதம்; மாலை, 5:00 மணிக்கு, 15,40,700 ஓட்டு - 87.58 சதவீதம்; மாலை, 6:00 மணிக்கு, 90.10 சதவீதம் என ஓட்டுகள் பதிவாகியிருந்தது. ஈரோடு கிழக்கில், 1,79,566 வாக்காளர்களில், 1,61,242 பேர் பதிவு செய்தனர். இது, 89.8 சதவீதம். ஈரோடு மேற்கில், 2,50,177 வாக்காளர்களில், 2,20,038 பேர் பதிவு செய்தனர். 87.95 சதவீதமாகும். மொடக்குறிச்சியில், 2,07,664 வாக்காளர்களில், 1,87,603 பேர் பதிவு செய்தனர். 90.34 சதவீதம். பெருந்துறையில், 2,14,431 வாக்காளர்களில், 1,98,276 பேர் பதிவு செய்தனர். 92.47 சதவீதம். பவானியில், 2,23,172 வாக்காளர்களில், 2,05,237 பேர் பதிவு செய்தனர். 91.96 சதவீதம். அந்தியூரில், 2,07,355 வாக்காளர்களில், 1,82,782 பேர் பதிவு செய்தனர். 88.15 சதவீதம். கோபியில், 2,39,179 வாக்காளர்களில், 2,17,036 பேர் பதிவு செய்தனர். 90.74 சதவீதம். பவானிசாகரில், 2,37,613 வாக்காளர்களில், 2,12,733 பேர் பதிவு செய்தனர். 89.53 சதவீதம். மொத்தம் எட்டு தொகுதிகளில், 17,59,157 வாக்காளர்களில், 15,84,947 பேர் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். இது, 90.10 சதவீதமாகும்.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், 19,97,189 வாக்காளர்களில், 15,09,692 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். இது, 76.91 சதவீதமாகும்.
