ADDED : மார் 04, 2026 08:58 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த பிப்., மாதம், மாநகரின் பல்வேறு பகுதிகளில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு விதிமீறல் தொடர்பாக, வழக்கு பதிந்து வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.
இந்த வகையில், மது போதையில் வாகனம் ஓட்டியதாக, 52 வழக்கு, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 471 வழக்கு, உரிமமின்றி வாகனம் இயக்கியதாக, 75 வழக்கு, மொபைல் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக, 45 வழக்கு என, 910 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிந்து, 3.54 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். மது போதையில் வாகனம் இயக்கிய, 25 பேரின் ஓட்டுநர் உரிமத்தை, தற்காலிகமாக ரத்து செய்ய ஆர்.டி.ஓ., அலுவலர்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
