ADDED : ஏப் 16, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில், தேர்தல் அலுவலர்களாக பணியாற்றும் அரசு பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு ரங்கம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நேற்று நடைபெற்றது. அப்போது, ஓட்டு செலுத்துபவர்களின் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் ஒவ்வொருத்தராக தபால் ஓட்டை பதிவு செய்து பெட்டியில் போட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியில், 1,244 பேர் தபால் ஓட்டு பதிவு செய்திருந்த நிலையில், 921 பேர் ஓட்டு போட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
