தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 96 சதவீத தேர்ச்சி

ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 96 சதவீத தேர்ச்சி

ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 96 சதவீத தேர்ச்சி


ADDED : மே 17, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2025 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

ஈரோடு மாவட்டத்தில், 353 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 12,081 மாணவர்கள், 12,654 மாணவியர் என, 24,146 பேர் தேர்வெழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில், 11,412 மாணவர், 11,769 மாணவியர் என, 23,181 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர், 94.46 சதவீதம், மாணவியர், 97.55 சதவீதம் ஆகும். மொத்த தேர்ச்சி சதவீதம், 96 சதவீதம் ஆகும். இது மாநில அளவில், 11வது இடமாகும். கடந்த ஆண்டைவிட, 0.92 சதவீதம் கூடுதல் தேர்ச்சியாகும். கடந்தாண்டில் மாநில அளவில், ஏழாமிடத்தை பெற்றிருந்தது. மாவட்ட அளவில், 189 அரசு பள்ளிகளை சேர்ந்த, 6,030 மாணவர்கள், 6,717 மாணவியர் என, 12,747 பேர் தேர்வு எழுதியதில், 5,532 மாணவர், 6,469 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி தேர்ச்சி விகிதம், 94.15 சதவீதமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us