/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி
/
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி
ADDED : செப் 26, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில், பழுதாகி நின்ற கரும்பு லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை, 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. நாள்தோறும் ஏராளமான வாக-னங்கள் சென்று வருகின்றன. நேற்று முன்தினம் மாலை, தாள-வாடி பகுதியிலிருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு, லாரி திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. 27வது கொண்டை ஊசி வளைவில் வரும் போது, ஆக்சல் கட்டாகி லாரி சாலையோரத்தில் மோதி நின்றது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து கொண்டே சென்றது. போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது. பின்பு பழுது நீக்கி லாரியை எடுத்து சென்-றனர்.