ADDED : மார் 09, 2026 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்; அந்தியூர், தவிட்டுப்பாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன், 45; கிராம நிர்-வாக அலுவலர். மனைவி, மகளுடன் சான்ட்ரோ காரில் திருப்பூருக்கு நேற்று காலை, 9:00 மணிக்கு புறப்பட்டார். தவிட்டுப்பாளையத்தில் ஒரு பங்க்கில் காஸ் நிரப்பிக் கொண்டு வெளியே வந்தார்.
அப்போது திடீனெர முன்பகுதியில் புகை வரவே, உடனடியாக காரை நிறுத்திவிட்டு, மூவரும் இறங்கினர். சில நிமிடங்களில் காரின் முன்பகுதி தீப்பற்றி எரிய துவங்கியது. தகவலின்படி சென்ற அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

