ADDED : அக் 22, 2024 07:09 AM

ஈரோடு: திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம், குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் சரவணன், 45. அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 63. இவரின் மனைவி விஜயலட்சுமி. மூவரும் ஈரோடு அசோகபுரத்தில் உள்ள பனியன் மார்க்கெட்டுக்கு, 'ரோனால்ட் டஸ்டர்' காரில் நேற்று காலை வந்தனர். சரவணன் காரை ஓட்டினார்.
ஈரோடு - நசியனுார் சாலை வில்லரசம்பட்டி நால்ரோடு அருகே, 6:20 மணிக்கு கார் வந்தபோது, காரில் ஒயர்கள் கருகும் வாடையுடன், கரும்புகை வந்தது. இதனால், உஷாரான சரவணன், காரை சாலையோரம் நிறுத்தினார். மற்ற இருவரும் உடனடியாக இறங்கினர். சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிய துவங்கியது.
ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதே சமயம், கார் முற்றிலும் எரிந்து விட்டது. பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால், தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
