/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முன்னாள் ஊராட்சி தலைவருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
/
முன்னாள் ஊராட்சி தலைவருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
முன்னாள் ஊராட்சி தலைவருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
முன்னாள் ஊராட்சி தலைவருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
ADDED : ஜன 04, 2025 01:34 AM
நம்பியூர், ஜன. 4-
நம்பியூரை அடுத்த கூடக்கரையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 54; கூடக்கரை ஊராட்சி முன்னாள் தலைவர். நம்பியூர் வடக்கு வட்டார காங்., தலைவராகவும் உள்ளார்.
நம்பியூர் போலீஸ் ஸ்டேஷனில், சண்முகசுந்தரம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த, 1ம் தேதி வண்டிபாளையம் கொன்னக்கால் காடு என்ற இடத்தில், வெள்ளியங்கிரி மற்றும் சின்னசாமி ஆகியோர் விவசாய பூமியை இயந்திரம் மூலமாக சமன் செய்யும் பணியில் இருந்தனர். அப்போது  அஷ்ரப் அலி உள்ளிட்ட சிலர் வந்தனர். தங்களை பத்திரிகை நிருபர்கள் என்று கூறிக்கொண்டு, சட்டவிரோதமாக வெடி வைத்து தகர்க்கிறீர்களா என்று கேட்டுள்ளனர். மேலும், பத்திரிகையில் செய்தி வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து வெள்ளியங்கிரி என்னிடம் கூறவே, நம்பியூர் தாசில்தாரிடம் புகார் செய்வதற்காக, வெள்ளியங்கிரி மற்றும் சின்னச்சாமியுடன், தாலுகா அலுவலகத்துக்கு சென்று தாசில்தாரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது வந்த அஷ்ரப் அலி, என்னை தகாத வார்தை பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அஷ்ரப் அலி மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் அஷ்ரப் அலி புகாரின்படி, சண்முகசுந்தரம் உள்ளிட்ட மூவர் மீதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

