sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நுாற்றாண்டு பழமையான மரம் வேருடன் அகற்றி மறு நடவு

/

நுாற்றாண்டு பழமையான மரம் வேருடன் அகற்றி மறு நடவு

நுாற்றாண்டு பழமையான மரம் வேருடன் அகற்றி மறு நடவு

நுாற்றாண்டு பழமையான மரம் வேருடன் அகற்றி மறு நடவு


ADDED : டிச 22, 2025 09:06 AM

Google News

ADDED : டிச 22, 2025 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: ஈரோடு மாவட்டம் அத்தாணி- அருகே, செம்பு-ளிச்சாம்பாளையம் சாலை ராமலிங்கபுரத்தில், நுாற்றாண்டு பழமையான அரச மரம் இருந்தது. மரத்தின் வேர்களால் அருகில் உள்ள வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மக்கள் கோரிக்கையின்படி மரத்தை வெட்டி அகற்ற வருவாய் துறையினர் அனுமதி அளித்தனர். ஆனால் மரத்தை வேருடன் பறித்து, வனப்பகு-தியில் மறுநடவு செய்ய வனத்துறையினருக்கு மாவட்ட வன அதிகாரி அப்பால நாயுடு உத்தர-விட்டார்.

இதை தொடர்ந்து கடந்த, 6ம் தேதி அந்தியூர் வனத்துறையினர் மர கிளைகளை வெட்டி அகற்-றினர். வெட்டிய பாகம் துளிர் விட வசதியாக வெட்டப்பட்ட கிளை பகுதியை பாதுகாத்தனர். பிறகு மரத்தை எடுத்து, அத்தாணி அருகே பொன்-னாச்சி அம்மன் கோவில் வனப்பகுதியில் வைக்க முடிவு செய்தனர். அப்பகுதியில் ஏற்பாடு முடிந்த நிலையில் அரச மரத்தை ஈரோடு சிறகுகள் தன்-னார்வ அமைப்புடன் இணைந்து, கிரேன் மூலம் வேருடன் எடுக்கும் பணியை நேற்று காலை தொடங்கினர். எடை அதிகமாக இருந்ததால் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து நேற்-றிரவு, 8:00 மணியளவில் ராட்சத கிரேன் வரவ-ழைக்கப்பட்டு, மரம் அகற்றப்பட்டது. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மறு நடவு செய்-யப்பட்டது. இந்தப்பணி நள்ளிரவு வரை நீடித்தது.








      Dinamalar
      Follow us