/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண் ஊழியருடன் சென்ற சிப்காட் தொழிலாளி பலி
/
பெண் ஊழியருடன் சென்ற சிப்காட் தொழிலாளி பலி
ADDED : நவ 12, 2024 01:48 AM
பெண் ஊழியருடன் சென்ற
சிப்காட் தொழிலாளி பலி
பெருந்துறை, நவ. 12-
பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம், பாலன் நகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் கவுதம், 24; சிப்காட் நிறுவன தொழிலாளி. பல்சர் பைக்கில் தன்னுடன் வேலை செய்யும் திருத்துறைபூண்டியை சேர்ந்த குமார் மகள் சபீதா, 23, என்பவருடன், துடுப்பதி பிரிவு அருகே நேற்று மதியம் சென்றார்.
அப்போது சாலை நடுவில் இருந்த தடுப்பில் பைக் மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் இறந்தார். சபீதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

