ADDED : ஏப் 03, 2026 03:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,ஈரோடு அருகே கஸ்பாபேட்டையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அண்ணமார் கோவில் உள்ளது. பூசாரி நேற்று காலை கோவிலை திறக்க வந்தார். கோவில் பிரகாரத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருட்டு போனது தெரிய வந்தது. கோவிலில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராக்கள் பதிவை, தாலுகா போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் நள்ளிரவில் டூவீலரில் வந்த மர்ம ஆசாமி, கோவிலில் இருந்த வேலை பிடுங்கி, உண்டியலை உடைத்து, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. ஆசாமியை போலீசார் தேடி
வருகின்றனர்.
