/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையின் குறுக்கே விழுந்த மின் கம்பம்
/
சாலையின் குறுக்கே விழுந்த மின் கம்பம்
ADDED : அக் 23, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், கடம்பூர் அருகே, சாலையின் குறுக்கே விழுந்த மின் கம்பம் அகற்றாமல் கிடக்கிறது.கடம்பூர் மலை சுற்று வட்டார பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சின்னசாலட்டி செல்லும் வழியில் மின் கம்பம் சரிந்து விழுந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நல்வாய்ப்பாக உயிர் சேதாரம் ஏற்படவில்லை. இந்நிலையில், கம்பம் சரிந்து விழுந்து நான்கு நாட்களாகியும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.