/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
12 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குளம்
/
12 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குளம்
ADDED : நவ 08, 2024 01:16 AM
12 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குளம்
புளியம்பட்டி, நவ. 8-
புன்செய்புளியம்பட்டியை அடுத்த நொச்சிக்குட்டை கிராமத்தில், 75 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள குளத்தை சுற்றி, 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. குளத்தில் தண்ணீர் இருக்கும் போது மட்டுமே, இந்த நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாததால், நீர்வரத்தின்றி குளம் வறண்டது.
கடந்த சில வாரங்களாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளில், மழை பெய்ததால், குளத்துக்கு நீர் வர தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு குளம் நிரம்பி, உபரி நீர் வெளியேறுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் குளத்தில் இறங்கி குளிக்க துணி துவைக்க வேண்டாம் என்று, பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நொச்சிக்குட்டை பஞ்.,நிர்வாகம் சார்பிலும், மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின் குளம் நிரம்பியுள்ளதல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மானாவாரி சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர்.

