/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிறைமாத கர்ப்பிணி மாயம் அரசு டாக்டர் போலீசில் புகார்
/
நிறைமாத கர்ப்பிணி மாயம் அரசு டாக்டர் போலீசில் புகார்
நிறைமாத கர்ப்பிணி மாயம் அரசு டாக்டர் போலீசில் புகார்
நிறைமாத கர்ப்பிணி மாயம் அரசு டாக்டர் போலீசில் புகார்
ADDED : ஜூலை 16, 2025 01:22 AM
ஈரோடு, தாளவாடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் தமிழ் செல்வன். இவர், தாளவாடி போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தாளவாடி, கல்மண்டிபுரம் கிராமம், சோளகர் தொட்டியை சேர்ந்த சந்திரன் மனைவி செவ்வந்தி, 25; கருவுற்ற தினத்தில் இருந்து கடந்த, 5ம் தேதி வரை பைனாபுரம் சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தார்.
பிரவச தேதி கடந்த, 7 ஆகும். டாக்டரின் தொடர் கண்காணிப்பில் இருக்க பைனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அவர் வரவில்லை. மருத்துவ குழுவினர் செவ்வந்தியை தேடினர். அவர் வீட்டில் இல்லை. தாய்-சேய் நலன் கருதி கர்ப்பிணியை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.