நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அருகே ஜம்பை, நல்லிபாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 45; கூலி தொழிலாளி. நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.
மதியம் குடிசையில் திடீரென தீப்பிடித்தது. அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, டிவி உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து விட்டது. மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

