/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டப்பகலில் ஆட்டை கவ்வி சென்ற சிறுத்தை
/
பட்டப்பகலில் ஆட்டை கவ்வி சென்ற சிறுத்தை
ADDED : ஜூன் 01, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், ஆசனுார் அருகேயுள்ள பங்களாதொட்டியை சேர்ந்தவர் சத்யா. இவர், 15 ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம்போல் மேய்ச்சலுக்காக வீட்டருகில் விட்டிருந்தார். அப்போது திடீரென வந்த ஒரு சிறுத்தை, ஒரு ஆட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தை கவ்வி இழுத்து சென்றது. அப்பகுதியில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். பட்டப்பகலில் ஆட்டை சிறுத்தை கவ்வி சென்றது, அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.