/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாளவாடி அருகே கிரானைட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
/
தாளவாடி அருகே கிரானைட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
ADDED : அக் 02, 2024 01:44 AM
தாளவாடி அருகே கிரானைட்
ஏற்றி வந்த லாரி பறிமுதல்
சத்தியமங்கலம், அக். 2-
தாளவாடி அருகே, உரிய அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தாளவாடி அருகே சூசையபுரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று பஞ்சராகி நின்று கொண்டிருந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து முகமது ரஹ்மான், 27, என்பவர் தாளவாடி பகுதிக்கு கிரானைட் கற்களை உரிய அனுமதியின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. பின்பு தாளவாடி போலீசார், லாரியை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும், வருவாய்த்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி கிரானைட் கற்கள் எப்படி வந்தது என, தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.