ADDED : அக் 04, 2025 12:58 AM
பவானி, அத்தாணியை சேர்ந்த கூலி தொழிலாளி மாதேஸ்வரன், 49; திருமணமாகி மனைவி, ஒரு மகன், மூன்று மகள் உள்ளனர். தலையில் அடிபட்டதால் அவ்வப்போது வலிப்பு வரும். அத்தாணி பாடசாலை வீதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க நேற்று முன்தினம் சென்றார். குளித்து கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார்.
அப்பகுதியினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.* பவானி கீரைக்கார வீதியை சேர்ந்தவர் சந்திரன், 42; கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து, தாயாருடன் வசித்தார். நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு, பவானி குப்பம் காவிரி ஆற்று படித்துறையில் குளித்து கொண்டிருந்தவர் திடீரென தண்ணீரில் மூழ்கியதில் இறந்து விட்டார். பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.