/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரியால் உடைந்தது குழாய் ஆறாக வெளியேறிய தண்ணீர்
/
லாரியால் உடைந்தது குழாய் ஆறாக வெளியேறிய தண்ணீர்
ADDED : ஏப் 07, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: கேரளாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு பாக்கு லோடு ஏற்றிய ஒரு லாரி, பெருந்துறையை அடுத்த சீனாபுரம் வழியாக, நேற்று அதி-காலை சென்றது.
அப்பகுதியில் சாலையோரம் அத்திக்கடவு- அவி-நாசி திட்டக்குழாயின் ஏர் வால்வு உள்ளது. எதிர்பாராதவிதமாக அதன் மீது மோதியதில் குழாய் உடைந்து, தண்ணீர் பீய்ச்சியடித்து ஆறாக வெளியேறியது. குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்-தனர்.

