ADDED : ஆக 09, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, அம்மாபேட்டையை சேர்ந்தவர் சக்திவேல், 57. நேற்று சக்திவேல், அவரது மனைவி கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அவர்களது குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டதால், வீட்டில் யாரும் இல்லை. அப்போது இவரது குடிசை வீட்டில் தீப்பிடித்துள்ளது.
அந்தியூர் தீயணைப்பு வீரர்கள், 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பாத்திரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.