/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துக்க நிகழ்வுக்கு வந்த வாலிபர் இடி தாக்கி பலி
/
துக்க நிகழ்வுக்கு வந்த வாலிபர் இடி தாக்கி பலி
ADDED : டிச 29, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துக்க நிகழ்வுக்கு வந்தவாலிபர் இடி தாக்கி பலி
பவானி, டிச. 29-
ஈரோடு, திண்டல், திருமலை கார்டன் பகுதியை சேர்ந்த ராமதுரை மகன் கவின்குமார், 25; கூலி தொழிலாளி. வெள்ளித்திருப்பூர் அரு ஜரத்தல் காட்டுக் கொட்டகையில், உறவினர் இறப்பு நிகழ்வுக்கு நேற்று முன்தினம் வந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. நடந்து சென்றபோது இடி தாக்கியதில் சுருண்டு விழுந்தார். அப்பகுதியினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து
வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

