தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு ஏமாற்றம்'

'ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு ஏமாற்றம்'

'ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு ஏமாற்றம்'


ADDED : செப் 01, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; தமிழக சட்டசபையில் பட்ஜெட்டின்போது பால் கொள்முதல் விலை, இரண்டு ரூபாய், ஊக்கத்-தொகை, ஒரு ரூபாய் என உயர்த்தி, ஆவினில், 38 ரூபாய்க்கு பதில், 41 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய அறிவித்தனர்.

இதுபற்றி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி கூறியதா-வது: ஆவின் பால் கொள்முதல் விலையை, 35 ரூபாயில் இருந்து, 45 ரூபாயாக கொள்முதல் செய்யவும், ஊக்கத்தொகை மூன்று ரூபாயில் இருந்து, 10 ரூபாயாக உயர்த்த கோரினோம்.முதலில் கொள்முதல் விலை, 2 ரூபாய், ஊக்கத்-தொகை, 1 ரூபாய் என உயர்த்தினர். தற்போது மூன்று ரூபாய் உயர்த்தி உள்ளனர். இதன் மூலம், 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக அறிவித்-துள்ளனர்.

கூட்டுறவு சொசைட்டியில் பால் ஊற்றும்போது லிட்டருக்கு, 1.25 ரூபாய் நிர்வாக செலவுக்காக பிடித்தம் செய்தது போக, 42.75 ரூபாய் மட்டுமே உற்பத்தியாளருக்கு கிடைக்கும். மீண்டும் விலையை உயர்த்த வலியுறுத்துகிறோம். கட்டு-படியாகும் விலை கிடைக்காவிட்டால், ஆவி-னுக்கு பால் ஊற்றுவோர், தனியாருக்கு செல்வது நிச்சயம். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us