/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழாயை சீரமைக்க தோண்டிய குழியால் விபத்து அபாயம்
/
குழாயை சீரமைக்க தோண்டிய குழியால் விபத்து அபாயம்
ADDED : ஜன 27, 2025 02:21 AM
கோபி: கோபி அருகே சத்தி சாலையில், கொடிவேரி அணை பிரிவை கடந்து, திருவள்ளுவர் நகர் என்ற இடத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி உள்ளது.
தொட்டியின் குழாய் இணைப்பில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய, காசிபாளையம் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் கோபி சாலையில் குழி தோண்டி பணி செய்தனர். வேலை முடிந்த நிலையில் குழியை சீராக சமன் செய்து சாலை அமைக்கவில்லை. இதனால் கோபி வழித்தடத்தில் பயணிக்கும் டூவீலர் முதல் பிற வாகனங்கள் வரை விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாகன நடமாட்டம் அதிகம் உள்ள சாலையை விரைந்து சீர-மைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காசிபாளையம் டவுன் பஞ்., சேர்மன் தமிழ்ச்செல்வி (தி.மு.க.,) கூறுகையில், 'உடனே குழியை மூடினால், சாலை கீழே இறங்கி விடும் என்பதால் மூடவில்லை. அந்த இடம் சம-னானதும் கான்கிரீட் மூலம் சீரமைக்கப்படும்' என்றார்.

