ADDED : டிச 28, 2024 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி-அத்தாணி சாலை பிரிவில், தாறுமாறாக பயணிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோபி-சத்தி சாலையில், அத்தாணி சாலை பிரிவு உள்ளது. எந்-நேரமும் வாகன நடமாட்டம் உள்ள பிரிவில் தாறுமாறாக வாக-னங்கள் பயணிக்கிறது. இதனால், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்ப-குதியில், முன்பு போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
தற்போது போலீசார் இல்லாததால், அத்தாணி சாலை பிரிவில், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து பிரிவு போலீசார் அப்பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி, விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

