தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தரமற்ற சாக்கடை கால்வாய் அமைத்ததாக குற்றச்சாட்டு

தரமற்ற சாக்கடை கால்வாய் அமைத்ததாக குற்றச்சாட்டு

தரமற்ற சாக்கடை கால்வாய் அமைத்ததாக குற்றச்சாட்டு


UPDATED : மே 08, 2026 07:01 AM

ADDED : மே 08, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 07:01 AM ADDED : மே 08, 2026 03:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி எட்டாவது வார்டு நந்தவன தோட்டம் இரண்டாவது வீதியில், புதிதாக அமைக்கப்பட்ட சாக்கடை பயன்பாட்டுக்கு வரும் முன்பே, அதன் பக்கவாட்டு கான்கிரீட் சுவர் விரிசல் அடைந்துள்ளது.

Image 1574108


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: நந்தவன தோட்டம் பகுதியில் நான்கு வீதி உள்ளது. இதில் நான்காவது வீதியை சேர்ந்தவர்கள் அடிப்படை வசதியை செய்துத்தரக்கோரி அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக கடந்தாண்டு அக்., மாதம் பேனர் வைத்தனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் அப்பகுதியுடன் சேர்த்து இருகில் உள்ள நந்தன தோட்டம் இரண்டாவது வீதியிலும் சாலை, சாக்கடை பணி மேற்கொண்டனர். அப்போது சாலையோரத்தில் கான்கிரீட் சுவருடன் சாக்கடை கட்டினர். இன்னும் பயன்பாட்டுக்கே வராத நிலையில், பக்கவாட்டு சுவரில் விரிசல் விட துவங்கியுள்ளது. தரமற்ற முறையில் கட்டியதே காரணம். அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us