தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/திண்டல் வேளாளர் பொறியியல் கல்லுாரியில் சாதனையாளர் தினம்

திண்டல் வேளாளர் பொறியியல் கல்லுாரியில் சாதனையாளர் தினம்

திண்டல் வேளாளர் பொறியியல் கல்லுாரியில் சாதனையாளர் தினம்


ADDED : மே 01, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், சாதனையாளர்கள் தின விழா, பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி சி.சி.ஓ., குமாரவேலன் வரவேற்றார். முதன்மை விருந்தினராக கோவை மண்டல ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் மற்றும் வளாகத்தேர்வு தலைவர் ஹரி கிருஷ்ணன் கலந்து கொண்டு, சாதனை புரிந்த மாணவர்களை பாராட்டினார். கல்லுாரி முதல்வர் ஜெயராமன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், அறக்கட்டளை உறுப்பினர் யுவராஜா ஆகியோர், மாணவர், ஆசிரியர்களின் சிறப்பான சாதனைகளை பாராட்டினர். மொத்தம், 153 மாணவர் திறமைப்பரிசு மற்றும் சிறந்த வெளியேறும் மாணவர் விருதுகளை பெற்றனர். மேலும், 22 மாணவர் சிறந்த திட்டங்களுக்கான விருது பெற்றனர்.

அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய மாணவர், விருது கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையை சேர்ந்த வர்ஷிணிக்கு வழங்கப்பட்டது. நுாற்று-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மாணவர்கள் பணி நியமன ஆணை பெற்றனர்.

விழாவில் வேளாளர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர், புலமுதல்வர், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி, நிர்வாக மேலாளர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர். மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை தலைவர் நிஷா ஏஞ்சலின் நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us