/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தந்தை சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை: வாலிபர் புகார்
/
தந்தை சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை: வாலிபர் புகார்
தந்தை சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை: வாலிபர் புகார்
தந்தை சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை: வாலிபர் புகார்
ADDED : டிச 26, 2024 01:24 AM
ஈரோடு, டிச. 26-
தந்தை சாவுக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு எஸ்.பி.,யிடம் வாலிபர் புகார் மனு அளித்துள்ளார்.
அரச்சலுார் வடுகபட்டி வினோபா நகரை சேர்ந்த பவித்ரன். இவர், ஈரோடு எஸ்.பி. ஜவகரிடம் கடந்த, 24ல் அளித்த புகார் மனு:
என் தந்தை ராஜேந்திரன் (எ) சித்தர், 55, தாய் அமுதா, சிரஞ்சீவி என்ற தம்பி உள்ளார். கடந்த, 23 மாலை 5:10 மணிக்கு என் தந்தை, தம்பியை பைக்கில் அழைத்து கொண்டு அரச்சலுார் போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்றார். எதிரே வேகமாக வந்த கார், பைக் மீது மோதாமல் இருக்க தந்தை ஒதுங்கினார். அப்போது சாலை தடுப்பில் பைக்  மோதியது. இதில் சாலை தடுப்பு கீழே விழுந்தது. இதை பார்த்த அரச்சலுார் போலீசார், என் தந்தையை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். இதையறிந்த நான் போலீஸ் ஸ்டேஷன் வந்தேன். என் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தியதை மொபைல் போனில் படம் எடுத்தேன். இதனால் போலீசார் என்னை திட்டி அடித்து விட்டனர். இதை பார்த்த என் தந்தை அழுது கொண்டிருந்தார். பின்னர் வீட்டுக்கு அழைத்து வந்தேன்; சிறிது நேரத்தில் இறந்து விட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

