ADDED : ஜூலை 19, 2026 06:15 AM

ஈரோடு:காளிங்கராயன்
வாய்க்காலில் தற்போது சிறப்பு நனைப்புக்காக கடந்த, 14ம் தேதி முதல்
தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் வாய்க்கால் நீரை சட்ட
விரோதமாக திருடுவோரை தடுக்க, சிறப்பு குழு அமைத்துள்ளனர்.
இதுபற்றி நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
காளிங்கராயன்
வாய்க்காலில் உயிர் நீர் திறக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு
தண்ணீர் வரும். தற்போது திறக்கப்பட்ட நீரால், நீண்ட கால பயிர்கள்,
நிலத்தடி நீர் பயன் பெறும். தவிர ஆடு, மாடு உள்ளிட்ட
கால்நடைகளுக்கான குடிநீர் பற்றாக்குறை சமாளிக்க இயலும். கடைமடை
வரை தண்ணீர் சென்ற பின் மதகுகள் திறக்கப்படும். வாய்க்காலில்
விவசாயிகள், ஆலைகள், பொதுமக்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடக்கூடாது.
நீர் திருட்டை கண்காணித்து தடுக்க, நீர் வளத்துறை, வருவாய் துறை,
வேளாண் துறை, விவசாயிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருட்டு கண்டறியப்பட்டால், போலீஸ் மூலம் குற்ற வழக்கு பதிந்து
நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.
