ADDED : மே 13, 2026 06:24 AM
துார்வாறும் பணியில், குளிரி செடிகள், ஆகாயத்தாமரை, ஊனாங்கொடி போன்றவற்றை முழுமையாக அகற்றி அழிக்க வேண்டும்.
ஈரோடு மாநகராட்சியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள், சாயப்பட்டறை ஆலைகள், தோல் ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் ஆலை கழிவு நீர், பிற கழிவு நீரை வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகளில் திறந்து விடுகின்றனர்.
இவ்வாறு சுத்திகரிப்பு செய்யாமல் வாய்க்கால், நீர் நிலைகளில் கழிவு நீரை திறந்து விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலைகள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
காலிங்கராயன் பெயர் சூட்ட வேண்டும்செயல்படாமல் உள்ள அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும். தேவைக்கு ஏற்ப புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். ஜூன், 16 முதல் ஏப்., 20 வரை, 320 நாட்கள் தொடர்ந்து ஒரே அரசாணை மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
ஈரோடு, சோலார் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு காலிங்கராயன் பெயர் சூட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
