ADDED : பிப் 27, 2024 02:06 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 46 தானியங்கி மாழை மானிகள் மற்றும், 2 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.இதுபற்றி, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், புதிதாக தானியங்கி மழைமானிகள், தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்யும் மழை அளவை கணக்கிடும்படி, புதிதாக, 46 தானியங்கி மழை மானிகள், 2 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவ, தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக தானியங்கி மழைமானி அமைக்கும் வகையில், மொடக்குறிச்சி 'ஆ' கிராமத்தில் பணி துவங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தானியங்கி மழைமானியை சுற்றி கம்பிவேலி அமைக்கும் பணி நடக்கிறது. பின், மாவட்ட அளவில், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி ஆகிய இடங்களில் தலா, 3 பெருந்துறை, தாளவாடி, அந்தியூரில் தலா, 6, கோபி - 4, சத்தியமங்கலம் - 10, நம்பியூர் - 2 என, 46 தானியங்கி மழைமானி புதிதாக அமைக்கப்படுகிறது. மேலும், தானியங்கி வானிலை மையங்கள் மொடக்குறிச்சி, தாளவாடியில் அமைகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
