/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போகி, பொங்கலால் கூடுதல் குப்பை அகற்றம்
/
போகி, பொங்கலால் கூடுதல் குப்பை அகற்றம்
ADDED : ஜன 16, 2024 10:15 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகை குப்பை அகற்றப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: மாநகராட்சி வார்டுகளில் வழக்கமாக தினமும், 220 டன் குப்பை சேகரமாகும். பண்டிகை தினங்களில் கூடுதலாக, 5 முதல், 10 டன்னுக்கு மேல் சேரும். பொங்கல் பண்டிகையால் சாலையோரங்களில் பொங்கல் விற்பனையில் மிஞ்சிய கரும்பு, தோகை, மஞ்சள் குலை உட்பட பல்வேறு இலை, தழைகளை நேற்று அகற்றி, சாலை, தெருக்களை, துாய்மை தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர்.
நேற்று முன்தினம் கூடுதலாக, 20 டன்னுக்கு மேல் குப்பை அகற்றப்பட்டது. போகி பண்டிகைக்காக அமைத்த தற்காலிக மையங்களில் தேவையற்ற பொருள், பாத்திரம், பேப்பர், சாக்கு, தலையணை, மெத்தை, துணிகள் என, 5 டன் கழிவை தனியாக அகற்றினோம். இவ்வாறு கூறினர்.