ADDED : மே 18, 2026 01:58 AM

கோபி:தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்தில், நெல் சாகுபடிக்காக கூடுதலாக தண்ணீர்
திறக்கப்பட்டது.
பவானிசாகர்
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால்
மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த, ஏப்.,27 முதல், ஆக.,24 வரை,
120 நாட்களுக்கு, முதல் போக சாகுபடிக்கு தண்ணீர்
திறக்கப்பட்டுள்ளது. அந்நீரை கொண்டு இரு பாசன விவசாயிகளும்,
நாற்றாங்கால் அமைத்து, விதை நெல் விதைக்கும் பணியில் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரு வாரத்தில், நடவுப்பணி துவங்க உள்ளனர்.
தடப்பள்ளி
வாய்க்காலில் நேற்று முன்தினம், 450 கன அடி, அரக்கன்கோட்டை
வாய்க்காலில், 250 கன அடி திறக்கப்பட்டது. இந்நிலையில்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தடப்பள்ளி வாய்க்காலில், 150 கன அடி
தண்ணீர் நேற்று கூடுதலாக திறக்கப்பட்டது. இதனால் தடப்பள்ளி
வாய்க்காலில், 600 கன அடி தண்ணீர் வெளியேறியது. அரக்கன்கோட்டை
வாய்க்காலில், 250 கன அடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.
