ADDED : மே 19, 2026 02:33 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட, 10.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டு அக்.,24ல் பணி துவங்கியது. 31,921 சதுர
அடி இடத்தில், 28,455 சதுர அடியில் கட்டடம் கட்டப்படுகிறது.
கட்டுமான பணிகளை, தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழக ஏ.டி.ஜி.பி.,
செந்தில்குமார் ஆய்வு செய்தார். தமிழ்நாடு காவல் துறை
வீட்டுவசதி கழக பொறியாளர்கள் உடனிருந்தனர். அவர்களிடம் கட்டடம்
கட்டும் பணிகளின் நிலை, நிறைவு பெறும் காலம் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். பணிகளை விரைவாக, தரமானதாக முடிக்க
அறிவுறுத்தினார். ஏற்கனவே கடந்த ஏப்.,5ல் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்
உடனிருந்தார்.
