/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடி 2வது வெள்ளியில் களை கட்டிய வழிபாடு
/
ஆடி 2வது வெள்ளியில் களை கட்டிய வழிபாடு
ADDED : ஜூலை 27, 2024 01:13 AM
ஈரோடு: ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், கள்ளுக்கடை மேடு காளியம்மன் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாரா-தனை நடந்தது. பெரிய மாரியம்மன் மஞ்சள் காப்பு அலங்கா-ரத்தில், கள்ளுக்கடை மேடு காளியம்மன் வெள்ளி கவச அலங்கா-ரத்தில் அருள்பாலித்தனர்.கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோவிலில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோட்டை பத்ரகாளி அம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.* கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரே, 60 அடி நீள குண்-டத்தில், ஏராளமான பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல் கோபி சாரதா மாரியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவிலில் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.* புன்செய்புளியம்பட்டி மாரியம்மன், ஊத்துக்குளியம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், ஆதிபராசக்தி அம்மன், சவுடேஸ்வரியம்மன் கோவில்களில் அபிஷேக, ஆராதனைக-ளுடன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. மாரியம்மன், பிளேக்மாரியம்மன், தங்க காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது.* பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையம், ராமலிங்க சவு-டேஸ்வரியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது.* அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு கோவில் வளாகத்தில், கோ பூஜை நடந்தது. பின் பத்ரகாளியம்மனுக்கு காய், கனி அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் அங்காளம்மன் கோவில், தவிட்டுப்பாளையம் சவு-டேஸ்வரி அம்மன் மற்றும் சுற்று வட்டார பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.* பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, காலை முதலே பக்-தர்கள் வரத் தொடங்கினர். தரிசனம் செய்தும், மொட்டை அடித்தும், பலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் பகுதியில் உப்பு மிளகு துாவி வழிபட்டனர்.

