ADDED : ஆக 08, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில், 2 அரசு ஐ.டி.ஐ., மற்றும் 10 தனியார் ஐ.டி.ஐ.,கள் உள்ளன.
இங்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ, மாணவியர் நேரடியாக சேர கடந்த,
31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.
இது தற்போது வரும், 14ம் தேதி
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு
மாதாந்திர உதவித்தொகை, 750 ரூபாய், அரசு பள்ளிகளில் படித்து
தமிழ்புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தில், 1,000 ரூபாய், இலவச
லேப்டாப், சைக்கிள், கருவிகள், பஸ் பாஸ் பெறலாம். கூடுதல் விபரத்துக்கு
அந்தந்த பகுதி அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களை அணுகலாம்.
