ADDED : மார் 08, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், பாசறை துவக்க தினத்தை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு, மாவட்ட செயலாளர் ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின், என்.ஜி.ஜி.ஓ., காலனி செல்வவிநாயகர் கோவிலில் எதிர்கட்சி தலைவர் இ.பி.எஸ்., தமிழக முதல்வராக வேண்டி சிறப்பு பூஜை செய்து, இனிப்பு வழங்கினர். இதில் பாசறை செயலாளர் சிவகுமார், மாணவரணி செயலாளர் ரத்தன் பிரத்வி, பகுதி செயலாளர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெயராஜ், ஜெயபாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

