ADDED : செப் 23, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்: அண்ணாதுரை பிறந்தநாளை ஒட்டி, நம்பியூர் யூனியன் ஓலக்கோயில் ஊராட்சி மலையப்பாளையத்தில், நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசியதாவது; கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் இப்பகுதிக்கு வந்து சென்றது. தற்போது மூன்று மணி நேரத்துக்கு ஒரு பஸ்தான் வருகிறது. மகளிருக்கு இலவச பயணம் என்று அறிவித்து, பஸ்களின் இயக்கத்தை குறைத்ததுதான் தி.மு.க., அரசின் சாதனை. இவ்வாறு பேசினார்.