/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் அ.தி.மு.க., மனித சங்கிலி
/
பெருந்துறையில் அ.தி.மு.க., மனித சங்கிலி
ADDED : அக் 09, 2024 01:09 AM
பெருந்துறை, அக். 9--
தமிழகத்தில் உயர்ந்துள்ள சொத்து வரி, மின்சார கட்டணம், ஆவின் பால் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்விற்கு காரணமான, தி.மு.க., அரசை கண்டித்து, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம் டவுன் பஞ்., பகுதிகளில் மனித சங்கிலி போராட்டம், அ.திமு.க., சார்பில் நேற்று நடந்தது.
பெருந்துறை மற்றும் நல்லாம்பட்டி பகுதிகளில் நடந்த போராட்டத்துக்கு, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். கருமாண்டிசெல்லிபாளையம் மற்றும் காஞ்சிக்கோவில் டவுன் பஞ்., பகுதி போராட்டத்துக்கு, பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தில் பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுதுரை, பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணாசலம், பெருந்துறை யூனியன் சேர்மேன் சாந்தி ஜெயராஜ், துணை சேர்மேன் உமா மகேஸ்வரன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

