/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2024 01:49 AM
ஈரோடு:தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததை கண்டித்தும், போதை பொருட்களின் கேந்திரமாக தமிழகம் உள்ளதை கண்டித்தும், தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று, அ.தி.மு.க., பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதன்படி ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் ஈரோடு அ.தி.மு.க, ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணியம், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் முன்னிலை வகித்தனர்.முன்னாள் அமைச்சர்களும் எம்எல்ஏக்களுமான செங்கோட்டையன், கருப்பணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். இதில் தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

