/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முன்னேற்பாடு கூட்டம் சுதந்திர தினவிழா
/
முன்னேற்பாடு கூட்டம் சுதந்திர தினவிழா
ADDED : ஆக 08, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோட்டில் நடக்க உள்ள சுதந்திர தினவிழாவில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல், பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தந்த துறையினருக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
சுதந்திர தினவிழாவுக்கான பிற இடங்களிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விளக்கினர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.