/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இலக்கிய திறனறி தேர்வு ஹெச்.எம்.,களுக்கு அறிவுரை
/
இலக்கிய திறனறி தேர்வு ஹெச்.எம்.,களுக்கு அறிவுரை
ADDED : அக் 16, 2024 12:48 AM
இலக்கிய திறனறி தேர்வு
ஹெச்.எம்.,களுக்கு அறிவுரை
ஈரோடு, அக். 16-
தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு வரும், 19ல் ஈரோடு மாவட்டத்தில், 37 மையங்களில் நடக்கிறது. பிளஸ் 1 மாணவ, மாணவியர், 9,443 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான நுழைவு சீட்டுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, தர வேண்டும். தேர்வு மைய விபரத்தையும் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
நுழைவு சீட்டுகளில் பெயர், பிறந்த தேதி, போட்டோக்களில் திருத்தம் இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர் சான்றொப்பம், பள்ளி முத்திரையுடன் தேர்வெழுத வழிவகை செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.