/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குருநாதசுவாமி கோவில் திருவிழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை
/
குருநாதசுவாமி கோவில் திருவிழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை
குருநாதசுவாமி கோவில் திருவிழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை
குருநாதசுவாமி கோவில் திருவிழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை
ADDED : ஆக 12, 2025 01:23 AM
அந்தியூர், அந்தியூர் குருநாதசுவாமி கோவில் திருவிழா, பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் கவியரசு தலைமை வகித்தார்.
அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம் சம்பந்தமாக துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கடைகள் ஏலம் எடுத்த நபர்களிடம் கோவிலுக்கு வந்து செல்வோருக்கு குடிநீர், வசதி இட வசதி செய்யப்பட்டுள்ளதா? என விசாரித்து, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. விழா நடக்கும் ஐந்து நாட்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க, மின்வாரியத்துக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில், தேவையான வசதி செய்யவும் அறிவுறுத்தினர். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதிகளில் மிக பாதுகாப்பாக துாரி வகைகளை இயக்க அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பி.டி.ஓ.,க்கள் சரவணன், அமுதா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்துாரி, கோவில் நிர்வாகம் சார்பில், குரு ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

