ADDED : ஆக 27, 2026 03:18 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பவானிசாகர் அணையில் டிராக்டர் மூலம் வண்டல் மண் எடுக்கும் விவசாயி-களின் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்தில், முதல்வர் உத்தரவின்படி பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளுக்கு, இடையூறு இல்லாமல் இலவசமாக வண்டல் மண் எடுப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும். விவசாயிகளிடம் தேவையில்லாத காரணங்-களை கூறி பணம் வசூலிக்கும் இடைத்தரகர்கள், வியாபாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து வரும் 31ம் தேதி சத்தி தாசில்தார், டி.எஸ்.பி., - டி.எப்.ஓ., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோ-ரிடம் மனு அளிப்பது என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.
