தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற ஆலோசனை

தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற ஆலோசனை

தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற ஆலோசனை


ADDED : ஜன 10, 2026 08:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 08:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: காங்கேயம் தாலுகா பகுதியில், தை பருவத்தில் சிறிய மற்றும் பெரிய வெங்காயம் சாகுபடிக்கு, விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். தரமான விதை சரியான விலையில் விவசாயிக-ளுக்கு கிடைக்க, விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை நட-வடிக்கை மேற்கொண்டுள்ளது.

எனவே விவசாயிகள், விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும்போது, விதைகள் தரமானதா என்பதை கண்டறிந்து வாங்க வேண்டும். உரிமம் பெறாத விதை, காலாவதி விதைகளை வாங்க கூடாது. விற்பனை ரசீது கட்டாயம் கேட்டு பெற வேண்டும்.

ரசீதில் விதைகளின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்டிருக்க வேண்டும். இத்தகவலை ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us