/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவக்கம்
/
சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவக்கம்
சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவக்கம்
சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவக்கம்
ADDED : செப் 25, 2024 07:21 AM
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி அணைக்கட்டுக்கு கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீரும், மழை நீரும் வந்தடைகிறது.
அணைக்கட்டில் தேக்கப்படும் தண்ணீர், நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் திறக்கப்பட்டு, 2,450 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. தற்போது அணைக்கட்டு முற்றிலுமாக ஆகாயத்தாமரை, புல், புதர்கள் மண்டி, தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. அத்துடன், வாய்க்காலும் பழுதடைந்தும், குப்பை கொட்டியும், மண் மேடாக காணப்படுகிறது. இந்நிலையில் சூரம்பட்டி அணைக்கட்டில், ஆகாயத்தாமரையை அகற்றும் பணியை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது:
சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வரை, 13 கி.மீ., துாரத்துக்கு வாய்க்காலில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்று பிரச்னையாகிறது. 21 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, துார்வாரும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, 4 கி.மீ., துாரம் துார்வாரப்படுகிறது. அதிகமாக குப்பை கொட்டப்படும் இடத்தில், வேலி அமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளோம். தவிர, 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணைக்கட்டு குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை முழுமையாக அகற்றி, சுத்தம் செய்ய 'ஈரோடை அமைப்பு' மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மணீஷ், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், எம்.பி., பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.