/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பூத் சிலிப் வழங்காததால் சிரமப்பட்ட வாக்காளர்
/
பூத் சிலிப் வழங்காததால் சிரமப்பட்ட வாக்காளர்
ADDED : ஏப் 20, 2024 07:17 AM
பெருந்துறை : திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பெருந்துறை சட்டசபை தொகுதியில், 264 ஓட்டுச்சாவடிகளில் நேற்று தேர்தல் நடந்தது.
காலை தொடங்கி பிற்பகல், 12:௦௦ மணி வரை விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. வெயில் தாக்கம் அதிகமாக இருந்த, 1:௦௦ மணி முதல், 4:௦௦ மணி வரை மந்தமானது. அதன் பிறகு பழையபடி சுறுசுறுப்பாக நடந்தது.திங்களூர் அருகே மந்திரிபாளையம் அரசு பள்ளி ஓட்டுச்சாவடியில், இயந்திரம் பழுதானதால், அங்கு அரை மணி நேரம் கூடுதலாக நேரம் ஒதுக்கி ஓட்டுப்பதிவு, ௬:௩௦ மணி வரை நடந்தது. பெருந்துறை ஒன்றியம் மணியம்பாளையம், குள்ளம்பாளையம், பட்டகாரன்பாளையம் ஓட்டுச்சாவடிகளில் இயந்திரம் பழுதானது. ஆனால், சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான பகுதிகளில் பூத் சிலிப் சரிவர வழங்காததால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். பெருந்துறை ஒன்றியம் எல்லபாளையம் அரசுப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு, மினி டெம்போவில் வாக்காளர்களை ஏற்றி வந்த புகாரால், போலீசார் தலையிட்டு டிரைவரை எச்சரித்து அனுப்பினர்.

