தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 30 ஆண்டு கால கோரிக்கைக்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தீர்வு

30 ஆண்டு கால கோரிக்கைக்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தீர்வு

30 ஆண்டு கால கோரிக்கைக்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தீர்வு


ADDED : பிப் 10, 2026 08:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 08:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நிச்சாம்பாளையம் பஞ்., பகுதி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழையின்றி, விவசாயம் செய்ய வழியின்றி வானம் பார்த்த பூமியாக உள்ளது. எனவே இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, வாழ்வாதாரத்தை மீட்க, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக நிச்சாம்பாளையத்தில் கொட்டையன் கருக்குத்தோட்டம் பகுதியில் வறண்டு கிடக்கும் நான்கு குட்டைகளுக்கு, தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று, எம்.எல்.ஏ., ஜெயக்குமாருக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்காக, 1 கி.மீ., தொலைவில் உள்ள மாலா கோயில் பகுதியில் தேங்கும் கீழ்பவானி வாய்க்கால் உபரி நீரை கொண்டு வரலாம் என்றும் மக்கள் தெரிவித்தனர்.எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தினால், அரசாணை மற்றும் இதர நடைமுறைகளுக்கு கால தாமதம் ஏற்படும்.

இதனால் தனது சொந்த செலவில் மின் மோட்டார், 1 கி.மீ., துாரத்துக்கு பதிக்க குழாய்களையும் எம்.எல்.ஏ., வாங்கி கொடுத்தார். மக்களும் தங்கள் பங்குக்கு சோலார் மின் அமைப்புகளை ஏற்படுத்தி கொண்டனர். குழாய்கள் பதித்து, மின் மோட்டார் பொருத்தப்பட்ட நிலையில், சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இதில் குட்டைக்கு தண்ணீர் வந்தது. எம்.எல்.ஏ., ஜெயகுமார் தலைமையிலான விவசாயிகள், மக்கள் தண்ணீரில் மலர் துாவி வரவேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us