ADDED : மே 27, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரான மனோகரன் வீடு, ஈரோடு பெரியார் நகரில் உள்ளது. சில மாதங்களுக்கு முன் வெஸ்பா மொபட் வாங்கினார். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்யாதால் நெம்பர் பிளேட்டில் பதிவு எண் எழுதாமல் ஓட்டி வந்தார். கடந்த, 24ம் தேதி இரவு வீட்டு முன் சாவியுடன் நிறுத்தியிருந்தார்.
சிறிது நேரம் கழித்து வந்தபோது மொபட்டை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது முகத்தில் மாஸ்க் அணிந்த ஆசாமி, சிறிது துாரம் தள்ளிச்சென்று, பிறகு ஓட்டிச் சென்றது தெரிய வந்தது. புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
