/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி பணிகள் சரிபார்ப்பு முகாம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி பணிகள் சரிபார்ப்பு முகாம்
அ.தி.மு.க., பூத் கமிட்டி பணிகள் சரிபார்ப்பு முகாம்
அ.தி.மு.க., பூத் கமிட்டி பணிகள் சரிபார்ப்பு முகாம்
ADDED : மே 10, 2025 01:43 AM
காங்கேயம், காங்கேயம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., பூத் கமிட்டி பணிகளை சரி பார்க்கும் முகாம், காங்கேயத்தில் நேற்று மாலை நடந்தது. திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் முன்னிலை வகித்தார். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அ.தி.மு.க.,வில் அதிகம் இணைந்து வருகின்றனர். இன்றைய பூத் கமிட்டி குழுவிலும் ஆர்வமுடன் கலந்து கொள்வது
மிகவும் வரவேற்கதக்கது. அயராது கட்சி பணியிலும், பூத் பொறுப்பிலும் உழைக்க வேண்டும் என்று, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். முகாமில், 12 ஊராட்சிகளின், 66 பூத்களில், 42 பூத் ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு பூத்களுக்கும் பொறுப்பாளர், உறுப்பினர் என ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ., நட்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் திருச்செந்தில், ஒன்றிய நிர்வாகிகள் என்.எஸ்.என்.தனபால் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

